சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

நித்யானந்தாவின் ஆக்கிரமிப்பு... AM 12:52

கடந்த ஒரு வாரகாலமாக பதிவுலகையும், இணைய செய்தி உலகையும், பத்திரிக்கைகளையும், தொலைகாட்சி மற்றும் இன்ன பிற ஊடகங்கங்களையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து ஆக்கிரமித்திருக்கிறார் சுவாமி(?) நித்யானந்தா.

இத்தனை ஊடகங்களின் வாயிலாகவும் அவரை இன்றைக்கு தூற்றுபவர்கள்,  ஏற்கனவே கேட்டிருக்கவேண்டிய கேள்விகளாய் எனக்கு தோன்றியவை :

1. அவர் எப்படி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தார்?

2. எப்படி ஊருக்கு ஊர் ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்துப்போட்டார்?

3. கடவுள் என்று தன்னையே சொல்லிக்கொண்டு புற்றுநோயை எல்லாம்
குணப்படுத்துகிறாராம்.. அவர் எந்த மருத்துவக்கல்லூரியில் படித்தார்?

4 . இன்னும் எத்தனையோ சாமியார்கள் இருக்கிறார்களே. அவர்களும் பெண்கள் விஷயத்தில் மாட்டும்வரையில் வேறு என்னவேண்டுமானாலும் செய்யலாமா?

5. சாமியார்கள் செய்யக்கூடாத ஒரே தவறு இதுதானா? கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு, ஆள்கடத்தல், பொதுசொத்து அபகரிப்பு, வரியில்லா தொழில் நடத்தும் உரிமை. இவையெல்லாம் தவறே இல்லையா?

என்கிற எந்த கேள்வியையும் யாரும் கேட்டதில்லை.

அது என்னவோ தெரியவில்லை.. என்ன மாயமோ தெரியவில்லை, சாமியார்களும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி, அரசாங்கத்தை ஏமாற்றி சொத்து சேர்த்தால் அதனை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்....

இது ஒரு புறமிருக்க, நித்யானந்தா ஆக்கிரமிப்பு செய்ததனால், நமக்கு பிடித்த நாம் கேட்கவிரும்புகிற செய்திகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன.

1. பெட்ரோல், டீசல் விலை ஏறிப்போச்சே! .... அதனை எதிர்க்கும் மனப்பான்மையை நித்யானந்தவின் செய்தி அழித்துவிட்டதே!


2. 25000 கோடி அளவிற்கு மக்களின் வரிப்பணத்தில் உருவாகிய பொதுத்துறை நிறுவனங்களை விற்கப்போவதாக மத்திய அரசின் பட்ஜெட் சொல்கிறதே... அதன் மீதான நம்முடைய கோபங்களை நித்யானந்தாவின் செய்தி நீர்த்துப்போகச்செய்துவிட்டதே!

3. பென்னாகரம் இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சிகள் என்னென்ன நாடகமாடுகிறது, ஒரு ஓட்டிற்கு எவ்வளவு தருகிறார்கள் என்கிற பொதுஅறிவையும் வளரவிடவில்லையே இநத நித்யானந்தா.

4. ஐ.பி.எல். தொடங்கப்போகுதே... அதில் யார் யார் எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள்.. யார் வெல்லப்போகிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளமுடியவில்லை.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எழுதி வைத்திருந்தாலும் மற்ற பதிவுகளை 
பதிவிடமுடியாதே. மீறி பதிவிட்டாலும், திரட்டிகளில் நம்பதிவு முன்னேறவே முடியாதே.

எப்படியோ, நித்யானந்தா பற்றி நானும் ஒரு பதிவு எழுதிவிட்டேன்...
என்னையும் ஆட்டைக்கு சேத்துக்குங்கப்பா.........

கர்ண மோட்சம் - தேசிய விருது பெற்ற குறும்படம்.... PM 11:25

இன்றைய திரையுலகம், ஐந்து பாடல்கள், அதிலே ஒன்று குத்துப்பாட்டு, நாலு சண்டைக்காட்சிகள், கதாநாயகனின் வானளாவிய அறிமுகக்காட்சி போன்றவற்றால் சிக்கித்தவிக்கிறது. திரைப்படங்களுக்கு இருக்கிற வியாபார வரைமுறை குறும்படங்களுக்கு இல்லாத காரணத்தால், என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை தெள்ளதெளிவாக சொல்ல முடிகிறது குறும்படங்கள் மூலமாக.

எனவே என்னால் இயன்றவரை சில நல்ல குறும்படங்களை தேடிப்பிடித்து அதனை பலரின் பார்வைக்கு விமர்சனம் செய்ய விரும்புகிறேன்.

முதல் குறும்படமாக - கர்ண மோட்சம் 



சிறந்த குறும்படத்துக்கான தேசிய விருது, தமிழக அரசின் விருது உள்பட 60  விருதுகளை வாங்கிக்குவித்திருக்கிறது இந்த குறும்படம். நமது நாட்டில் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலையை பற்றிய குரும்படந்தான் இந்த கர்ண மோட்சம். ஒரு கூத்துக்கலைஞனின் ஒரு நாள் வாழ்க்கையை இந்த குறும்படம் மிக அழகாக சொல்ல முற்பட்டிருக்கிறது. கதையில் வரும் கூத்துக்கலைஞன் கூத்துக்களை அழிவதைப்பற்றி சொல்லும்போது நமக்கே தெரியாமல் நம் கலையை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் நிழலாடாமல் இல்லை... இந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பதினைந்து நிமிடங்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்கிற வரைமுறை இருந்ததோ என்னவோ, நாம் கதைக்குள் நன்றாக ஒன்றும்போது திடீரென முடித்தது போல் தோன்றுகிறது... இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சியே....

முதல்  பகுதி 


இரண்டாம் பகுதி 



மீண்டும் மற்றுமொரு குறும்படத்துடன் சந்திப்போம்..