சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

நித்யானந்தாவின் ஆக்கிரமிப்பு... AM 12:52

கடந்த ஒரு வாரகாலமாக பதிவுலகையும், இணைய செய்தி உலகையும், பத்திரிக்கைகளையும், தொலைகாட்சி மற்றும் இன்ன பிற ஊடகங்கங்களையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து ஆக்கிரமித்திருக்கிறார் சுவாமி(?) நித்யானந்தா.

இத்தனை ஊடகங்களின் வாயிலாகவும் அவரை இன்றைக்கு தூற்றுபவர்கள்,  ஏற்கனவே கேட்டிருக்கவேண்டிய கேள்விகளாய் எனக்கு தோன்றியவை :

1. அவர் எப்படி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தார்?

2. எப்படி ஊருக்கு ஊர் ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்துப்போட்டார்?

3. கடவுள் என்று தன்னையே சொல்லிக்கொண்டு புற்றுநோயை எல்லாம்
குணப்படுத்துகிறாராம்.. அவர் எந்த மருத்துவக்கல்லூரியில் படித்தார்?

4 . இன்னும் எத்தனையோ சாமியார்கள் இருக்கிறார்களே. அவர்களும் பெண்கள் விஷயத்தில் மாட்டும்வரையில் வேறு என்னவேண்டுமானாலும் செய்யலாமா?

5. சாமியார்கள் செய்யக்கூடாத ஒரே தவறு இதுதானா? கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு, ஆள்கடத்தல், பொதுசொத்து அபகரிப்பு, வரியில்லா தொழில் நடத்தும் உரிமை. இவையெல்லாம் தவறே இல்லையா?

என்கிற எந்த கேள்வியையும் யாரும் கேட்டதில்லை.

அது என்னவோ தெரியவில்லை.. என்ன மாயமோ தெரியவில்லை, சாமியார்களும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி, அரசாங்கத்தை ஏமாற்றி சொத்து சேர்த்தால் அதனை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்....

இது ஒரு புறமிருக்க, நித்யானந்தா ஆக்கிரமிப்பு செய்ததனால், நமக்கு பிடித்த நாம் கேட்கவிரும்புகிற செய்திகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன.

1. பெட்ரோல், டீசல் விலை ஏறிப்போச்சே! .... அதனை எதிர்க்கும் மனப்பான்மையை நித்யானந்தவின் செய்தி அழித்துவிட்டதே!


2. 25000 கோடி அளவிற்கு மக்களின் வரிப்பணத்தில் உருவாகிய பொதுத்துறை நிறுவனங்களை விற்கப்போவதாக மத்திய அரசின் பட்ஜெட் சொல்கிறதே... அதன் மீதான நம்முடைய கோபங்களை நித்யானந்தாவின் செய்தி நீர்த்துப்போகச்செய்துவிட்டதே!

3. பென்னாகரம் இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சிகள் என்னென்ன நாடகமாடுகிறது, ஒரு ஓட்டிற்கு எவ்வளவு தருகிறார்கள் என்கிற பொதுஅறிவையும் வளரவிடவில்லையே இநத நித்யானந்தா.

4. ஐ.பி.எல். தொடங்கப்போகுதே... அதில் யார் யார் எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள்.. யார் வெல்லப்போகிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளமுடியவில்லை.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எழுதி வைத்திருந்தாலும் மற்ற பதிவுகளை 
பதிவிடமுடியாதே. மீறி பதிவிட்டாலும், திரட்டிகளில் நம்பதிவு முன்னேறவே முடியாதே.

எப்படியோ, நித்யானந்தா பற்றி நானும் ஒரு பதிவு எழுதிவிட்டேன்...
என்னையும் ஆட்டைக்கு சேத்துக்குங்கப்பா.........

7 கருத்துகள்:

Sivamjothi சொன்னது…

I think he would have started whatever in your list... Finally our godly politicians gave him nice lesson via SUN TV.

I did his courses.. found it effective.

I think you dont know that petrol price is determined by CRUDE OIL price which is $80 / barrel. :)

ராம்ஜி_யாஹூ சொன்னது…

He earned money through his meditation training and coaching

Unknown சொன்னது…

//He earned money through his meditation training and coaching//

பயங்கர தமாசுங்க......
கோடிக்கான சொத்துக்களை மெடிடேஷன் மூலமாக சம்பாரிச்சாராம்..
என்னால சிரிப்பை அடக்க முடியல..

Peyar theriyaadhu சொன்னது…

// He earned money through his meditation training and coaching //

I'm curious to know how much "his" guru obtained as money for training him this technique.

These people are still believing that "He" obtained the money with trainings (and you should be such a fool to get trained for these stupid things).

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நியமான கருத்து பகிர்வு

சும்மாதான் சொன்னது…

பாலு, ராம்ஜி_யாஹூ - தங்களது வருகைக்கு நன்றி.. உங்களுக்கு தியாகராஜனும், "பெயர் தெரியாது"வும் பதில் சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்... அப்பறோம் பெட்ரோல் வெலையை பத்தி தனியா ஒரு பதிவு எழுதுறேன்.

தியாகராஜன், பெயர் தெரியாது, நினைவுகளுடன் -நிகே : உங்களுக்கு ரொம்ப நன்றிங்கோ.. தொடர்ந்து படிங்க.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நியாயமான கேள்விகள்.. நீங்கள் சொல்வது சரிதான்..!! செக்ஸ் மற்றும் சினிமா கவர்ச்சிகள் - தேவயான உருப்படியான விஷயங்களை கவனிக்க விடுவதில்லை..!! இது காலங்காலமான நடைமுறைதானே..!!