சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

கர்ண மோட்சம் - தேசிய விருது பெற்ற குறும்படம்.... பிற்பகல் 11:25

இன்றைய திரையுலகம், ஐந்து பாடல்கள், அதிலே ஒன்று குத்துப்பாட்டு, நாலு சண்டைக்காட்சிகள், கதாநாயகனின் வானளாவிய அறிமுகக்காட்சி போன்றவற்றால் சிக்கித்தவிக்கிறது. திரைப்படங்களுக்கு இருக்கிற வியாபார வரைமுறை குறும்படங்களுக்கு இல்லாத காரணத்தால், என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை தெள்ளதெளிவாக சொல்ல முடிகிறது குறும்படங்கள் மூலமாக.

எனவே என்னால் இயன்றவரை சில நல்ல குறும்படங்களை தேடிப்பிடித்து அதனை பலரின் பார்வைக்கு விமர்சனம் செய்ய விரும்புகிறேன்.

முதல் குறும்படமாக - கர்ண மோட்சம் சிறந்த குறும்படத்துக்கான தேசிய விருது, தமிழக அரசின் விருது உள்பட 60  விருதுகளை வாங்கிக்குவித்திருக்கிறது இந்த குறும்படம். நமது நாட்டில் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலையை பற்றிய குரும்படந்தான் இந்த கர்ண மோட்சம். ஒரு கூத்துக்கலைஞனின் ஒரு நாள் வாழ்க்கையை இந்த குறும்படம் மிக அழகாக சொல்ல முற்பட்டிருக்கிறது. கதையில் வரும் கூத்துக்கலைஞன் கூத்துக்களை அழிவதைப்பற்றி சொல்லும்போது நமக்கே தெரியாமல் நம் கலையை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் நிழலாடாமல் இல்லை... இந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பதினைந்து நிமிடங்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்கிற வரைமுறை இருந்ததோ என்னவோ, நாம் கதைக்குள் நன்றாக ஒன்றும்போது திடீரென முடித்தது போல் தோன்றுகிறது... இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சியே....

முதல்  பகுதி 


இரண்டாம் பகுதி மீண்டும் மற்றுமொரு குறும்படத்துடன் சந்திப்போம்..

7 கருத்துகள்:

பிரசன்னா இராசன் சொன்னது…

நண்பரே நீங்கள் இந்த குறும்படத்தைப் பற்றி எழுதியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் என்னுடைய வலைப்பூவில் இருந்து தானே இதை எடுத்தாண்டு உள்ளீர்கள். அப்படியாயின் அதற்கான முறையான அனுமதி பெற்றீர்களா? அல்லது குறைந்த பட்சம் நீங்கள் எங்கு எடுத்தாண்டு உள்ளீர்கள் என்ற குறிப்பை உங்கள் பதிவில் இடவில்லையே. இதையும் தாண்டி என்னுடைய வலைப்பூவில் ஒரு பின்னூட்டம் இட்டு இந்த வீடியோவை உபயோகிக்க நீங்கள் என்னிடம் அனுமதி வாங்கி இருக்கலாமே?

சும்மாதான் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரசன்னா.
நான் தங்களது எந்த பதிவையும் இதுவரையில் பார்த்ததே இல்லை.
ஜெயா தொலைக்காட்சியில் ஹாசினி பேசும் படம் என்கிற நிகழ்ச்சியில் சுகாசினி, இந்த பேசும் படத்தை பற்றி பேசியதை பார்த்தபின் எழுதிய பதிவு இது. அதற்கான சுட்டி இங்கே:
ஹாசினி பேசும் படம்
அதற்காக ஜெயா தொலைகாட்சி மீதும் சண்டைக்கு போவீர்களோ!
ஒரு படத்திற்கு விமர்சனம் எழுத யாரிடமும் உரிமை வாங்கத்தேவையில்லை என்பதை அன்போடு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.

பிரசன்னா இராசன் சொன்னது…

நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நீங்கள் பதிவிட்டுள்ள விடியோவும் நான் பதிவேற்றம் செய்தது தான். உங்கள் விமர்சனத்தை நான் குறை கூறவில்லை. நீங்கள் விமர்சிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர் என் ஆத்ம நண்பர். அவரின் அனுமதியோடு தான் என் வலைத்தளத்தில் மேற்கூறிய வீடியோவை உபயோகித்து உள்ளேன். இந்த வீடியோவை உபயோகிப்பதற்கு தான் அனுமதி பெற வேண்டும் என்று கூறினேன். காரணம் மேற்கூறிய குறும்படம் யூடியுபால் காப்பி ரைட் செய்யப்பட வீடியோ என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதனால் தான் நீங்கள் அனுமதி பெற வேண்டும் என்று கூறினேன்...

பிரசன்னா இராசன் சொன்னது…

மேலும் உங்கள் பதிவு தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குறும்படம் பிரிவில் சற்று கீழேயே என்னுடைய பதிவும் ஜெயமார்தாண்டன் அவர்களின் "கர்ணமோட்சம்" பற்றிய பதிவும் உள்ளது. அப்படியிருக்க தமிழ்மணத்தில் உங்கள் வலைத்தளத்தில் இணைத்து இரு மாதங்கள் ஆகியும், அந்த பதிவுகளைப் படிக்காமல் இந்த வீடியோவை இணைத்தேன் என்று நீங்கள் சப்பைக் கட்டு கட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் எனது பதிவில் "இந்த வீடியோவை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் உபயோகிக்க நினைத்தால் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம் இட்டு செல்லுங்கள். காரணம்: யூடியுப் இணையதளத்தால் காப்பி ரைட் செய்யப்பட வீடியோவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது..." என்று குறிப்பும் இட்டு உள்ளேன்...

சும்மாதான் சொன்னது…

நான் தங்களது பதிவையும் படிக்கவில்லை.. அதனால் அது காப்புரிமை பெறப்பட்ட வீடியோ என்பதுவும் தெரியாது. கர்ண மோட்சம் படத்தை பலரும் பார்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில்தான் பதிவிட்டேன். என் பதிவில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டேன்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இந்த திரைப்படம் பற்றி எங்காவது ஒளிப்படம் கிடைக்குமா..!!

சும்மாதான் சொன்னது…

//இந்த திரைப்படம் பற்றி எங்காவது ஒளிப்படம் கிடைக்குமா..!!//

http://www.youtube.com/watch?v=3W87_I79JKA

http://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM