சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

வேட்டைக்காரன் - சில ப்ளஸ்கள் முற்பகல் 10:42

வேட்டைக்காரனை ஏற்கனவே பல்வேறு கோணங்களில் அலசி ஆராந்து தோய்த்து தொங்கபோட்டுவிட்டார்கள் நமது நண்பர்கள். அதுவே என்னை வேட்டைக்காரனை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று தூண்டியது.

பக்கத்தில் இருக்கும் திரை அரங்கிற்கு சென்று படம் பாத்தேன். இந்த படத்தில் ஏராளமான் ப்ளஸ்கள் இருப்பதாய் நான் உணர்ந்தவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்:
  1. நல்ல எண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் நடக்கிற போட்டியில் நல்ல எண்ணங்களே ஜெயிக்கும், ஜெயிக்க வேண்டும் என்கிற உலகிற்கு தேவையான ஒரு கருவை படமாக்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. [படத்தில் நல்ல எண்ணங்கொண்ட ஹீரோ விஜய், கெட்ட எண்ணங்கொண்ட  வில்லனை அழிக்கிறார் என்று சொல்லவும் வேண்டுமோ]
  2. நீ என்னவாக வேண்டுமென நினைக்கிறாயோ அதற்காக கடினமாக உழைத்தால் நிச்சயம் அதுவாக மாறுவாய் என்கிற ஒரு பாசிடிவ் கருத்தையும் இயக்குனர் கதையினூடே சொல்லாமல் சொல்லியிருக்கிறார். [படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டுமென கனவு காண்கிறார். அதில் ஜெயக்கவும் செய்கிறார் என்பதை நீங்கள் யூகித்திருந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்]
  3. எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் ஹீரோ வந்து அநியாத்தை தட்டி கேட்பது என்பது முடியாத காரியம். அதனால் மக்களே அநியாயங்களை தட்டி கேட்க பழக வேண்டும் என்பதை ஒரு காட்சியால் விளக்கியிருக்கிறார்கள். [மார்க்கெட்டில் வில்லன் வந்து சிறுதொழில் வியாபாரிகளை மிரட்டும் ஒரு காட்சியில், அவர்களும் பதிலுக்கு அரிவாளை தூக்கி வில்லனை மிரட்டுகிறார்கள்]
  4. "நான் அடிச்சா தாங்க மாட்ட.." என்கிற பாடலில் தன்னால் என்னவெல்லாம் முடியும் என்கிற பட்டியலை முழு தன்னம்பிக்கையோடும்  தலைகனமில்லாமலும் சொல்லியிருக்கிறார். 
  5. ஹீரோவிற்கு எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், தன்னுடைய காதலிக்காக நேரம் ஒதுக்க மறக்கவில்லை. ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளிக்கு அவர் ஒரு டூயட் பாட தவறவில்லை. இன்றைய அவசர உலகத்தில் நம்முடைய காதலிக்காகவோ மனைவிக்காகவோ ஏதேனும் நேரம் ஒதுக்குகிறோமா என நம் எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கிறான் வேட்டைக்காரன். 
  6. ஹீரோ விஜய் ஒரு கல்லூரி மாணவராக படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் ஒரு காட்சியில்கூட புத்தகத்தை கையில் எடுத்ததில்லை. வெறும் புத்தகபுழுவாக மட்டும் இருப்பதினால் என்ன பயன் என்பதை நமக்கு சொல்லாமல் புரியவைத்திருப்பது வேட்டைக்காரனின் வெற்றி.
  7. நான்காண்டுகளாக +2 எழுதிக்கொண்டே இருக்கிறார் நமது ஹீரோ விஜய். ஆனால் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறார். தனக்கு படிப்பு ஏறவில்லை என ஒத்துக்கொள்ளும்  தைரியம் இன்றைக்கு இருக்கிற எந்த முன்னணி ஹீரோவால் முடியும்? இமேஜ் பார்க்காமல் இந்த பாத்திரத்தை அவர் ஏற்றிருப்பதே படத்தில் மிகபெரிய ப்ளஸ்ஸாக எனக்கு தோன்றியது.
இப்படி படத்தில் ஏராளமான பிளஸ் இருந்தும் ஏன் பலர் இந்த படத்தை தாறுமாறாக கிழித்தார்கள் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை......யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்........

ஒட்டு போட்டு என்னை ஊக்கப்படுத்துங்கோ......

9 கருத்துகள்:

arumbavur சொன்னது…

வேட்டைக்காரன் பட போட்டி வந்து அவதார போட்டியில் பொட்டிக்கு போகும் நிலையில்
உங்கள் குசும்பு பதிவு அமைதியான அட்டகாச காமெடி கலக்குங்க சந்துரு

கடைக்குட்டி சொன்னது…

இப்படி படத்தில் ஏராளமான பிளஸ் இருந்தும் ஏன் பலர் இந்த படத்தை தாறுமாறாக கிழித்தார்கள் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை......//

எனக்கென்னவோ நீங்கதான் நாறு ஆறா கிழிச்சதா தோணுது..

என்ன வில்லத்தனம் :-)

sarvan சொன்னது…

கலக்கல்

thenammailakshmanan சொன்னது…

விமர்சனம் அருமை இதுக்குப் பின்னாலயும் நான் வேட்டைக்காரன் பார்ப்பேனா என்ன

கவிதை காதலன் சொன்னது…

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு லொல்லு ஆகாது

சும்மாதான் சொன்னது…

அரும்பாவூர் : வரவுக்கு நன்றி. நீங்கதான் என்னோட பதிவுல மொதல் மொதல்ல பின்னூட்டம் போட்டது......
கடைக்குட்டி : ஏதோ நம்மள முடிஞ்சுது...
கவிதை காதலன் : எவ்வளவோ பண்ணிட்டோம்...இத பன்னமாட்டமா
தேனம்மைலக்ஷ்மணன் : படத்த பாராட்டினாலும் பாக்க மாட்டேன்னு அடம் புடிக்கிறீங்களே..இது நியாயமா
சர்வன் : நன்றிங்க...

பாஸ்கரன் சொன்னது…

என்னால தாங்க முடியல சாமி!!!!

chosenone சொன்னது…

என்ன வில்லத்தனம்!!!!!

chosenone சொன்னது…

naanga nallavara kettavara?aa aaa aahhhh.....