சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

பிரெட் உப்புமா AM 10:25

ஒரு நாள் வீட்டில் ரொம்ப போர் அடித்துக்கொண்டிருந்தது...ஏதாவது சாப்பிடலாம் என்றால் ஒன்றுமே இல்லாதது போன்று இருந்தது. ஒரு பாக்கெட் பிரெட் மட்டுமே இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் பிரெட்டை எண்ணையில் ரோஸ்ட் பண்ணி சாப்பிட்டு சற்று சலித்து விட்டது. அப்பொழுது விட்டத்தை பார்த்தேன்....தரையை பார்த்தேன்...விட்டத்தை பார்த்தேன்....தரையை பார்த்தேன்...என் அறிவிற்கு எட்டிய ஒரு புதிய உணவுதான் இந்த பிரெட் உப்புமா (என்னா பில்ட் அப் குடுக்குராய்ங்கபா)






என்னவெல்லாம் தேவை?

பிரெட் - 10 துண்டுகள்

வெங்காயம் - 1

உருளைகிழங்கு - 1

தக்காளி - 1

பீன்ஸ் - 1

கேரட் - 1

முட்டை - 2

உப்பு - தேவையான அளவு


எப்படி செய்யிறது?

1 . பிரெட்டின் நடுவில் இருக்கும் வெள்ளை பகுதியைமட்டும் எடுத்து சிறிய துண்டுகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

2. வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு ஆகியவற்றை தனித்தனியே  சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

3 . வாணலியில் (பெயர்க்காரணம்?) சிறிது எண்ணை விட்டு, நன்கு சூடானதும் வெங்காயத்தை போட்டு தாளிக்க வேண்டும்.

4 . வெங்காயம் வதங்கியதும்,தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.

5. வெங்காயமும் தக்காளியும் நன்கு வதங்கியதும் , நறுக்கி வைத்த காய்கறிகளையும் போட்டு வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

6 . காய்கறியில் இருக்கும் நீர் நன்கு வற்றும் வரை வதக்கி விட்டு, பின்னர் பிரெட் துண்டுகளை போட்டு நன்கு கிளற வேண்டும்.

7 . பிரெட்டின் வெள்ளை நிறம் மாறும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

8 .தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

9 . இரண்டு முட்டைகளையும் சிறிது உப்பு போட்டு தனியாக கிளறி எடத்து, அதன் பின்னர், வாணலியில் போடா வேண்டும்.

10 . கொஞ்சநேரம் கிளறிய பின்னர், பிரெட் உப்புமா ரெடி.


என்ன மாற்றம் செய்யலாம்?

1 . அசைவம் சாபிடாதவர்கள் முட்டை போடாமல் செய்யலாம். சுவை ஒன்றும் குறையாது.

2 . காய்கறிகள் எதுவுமே வீட்டில் இல்லை என்று கவலை பட வேண்டாம். எந்த காய்கறியும் போடாமலும் செய்யலாம்.

யாருக்கு பரிமாறலாம்?
சாப்பிட்டு பார்த்து சுவையாக இருந்தால் யாருக்கும் பரிமாறலாம். இல்லையெனில் நாம் மட்டும் தண்டனையை அனுபவிக்கலாம்.

ஒட்டு போடலாமே.......

4 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

sari sari

சரவணன். ச சொன்னது…

//தரையை பார்த்தேன்...விட்டத்தை பார்த்தேன்....தரையை பார்த்தேன்...//

நல்ல வேலை சைவ உப்புமா , நீங்க பாட்டுக்க (மேல போறது கிழ ஒடறது ) வச்சு அசைவ உப்புமா செய்யபோறீங்களோன்னு பயந்துட்டேன்.. சும்மா நகைச்சுவக்காக!

நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்,

பெயரில்லா சொன்னது…

ஜுரம் வந்தா இனிமேல் இந்த பிரட் உப்புமா சாப்பிடலாம் ..............

சும்மாதான் சொன்னது…

நன்றி அண்ணாமலையான்
சரவணன் : அண்ணே ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு
பெயரில்லா நண்பர் : நம்ம பிரட் உப்புமாவ மெடிக்கல் ஸ்டோர்ல விக்க சொல்லுவீங்க போல....
ரொம்ப நன்றி...தொடர்ந்து கருத்து சொல்லுங்கோ........