சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

வாக்களித்த அப்பாவி!!! AM 3:34

கோட்டுக்குக் கீழிருக்கும்
கூலித்தொழிலாளி
கடுமையாய் உழைத்தாலும்
கஞ்சிகூட கிடைப்பதில்லை!







நிலைமாற வேண்டுமென
நம்பிக்கையாய் வாக்களித்தால்,
விலையேற்றம், வரிவிதிப்பு
வேறேதும் பெறவில்லை!


தினம் பெறும் கூலிகூட
பேருந்தில் ஏறினாலே
பாதியாய் குறைகிறதே!


ஆட்சி செய்யும்
அரசைப் பார்த்து,
அன்பாய் கேட்டுப்பார்த்தார்!


விலை குறைக்க வேண்டுமென
வாதாடி வேண்டிநின்றார்!


அவரும் முடிவெடுத்தார்!
விலைகுறைப்பு நடத்த அல்ல,
வாஸ்து நிபுணரை சந்திக்க!


நிபுணரும் பதிலளித்தார்!
கண்ணகி சிலைதனிலே
வலதுகை விரிக்க வேண்டும்!
முடியாமற் போனாலோ,
சிலையகற்ற வேண்டுமென்றார்!


மஞ்சள் துண்டணிந்த ஒருவர்
மக்களுக்காக உழைக்க(!) வந்தார்!
அவரும்,
விலைகுறைப்பை வேண்டவில்லை!
கண்ணகி சிலைவேண்டி
கண்டித்து அறிக்கைவிட்டார்!


சிலையகற்றி சிலகாலம்
உருண்டோடிச் சென்றபின்னும்
கவலையில்லை இவர்கட்கு!
திசைதிருப்பும் வேலைதானே,
திருந்தவா பார்க்கிறார்கள்!



மாற்றத்தை வேண்டியே
மஞ்சளுக்கு வாக்களித்தோம்!
மீண்டும் வந்தது ஏமாற்றம்!



எம் பணத்தை

எமக்களித்தான்!

தொலைகாட்சி எனும் பொருளாய்!



அதில் வரும் விளம்பரத்தை
'ஆ' வென பார்க்கவைத்தான்!



இடைத்தேர்தல் வந்தாலோ
இறைத்துவிட்டான் எம் பணத்தை!



சங்கம் வளர்த்த ஊரையெல்லாம்
சாக்கடையாய் மாற வைத்தான்!



ரௌடியிசம்! தாதாயிசம்
ஊழலிசம் வாரிசிசம்!
புதுசு புதுசாய்
பல இசங்கள்!



சனநாயகம் என்பதெல்லாம்
சாக்கடையாய் மாறியதிப்போ!
யாருக்குத்தான் ஒட்டு போட?



உண்ண உணவின்றி
உழைக்க வேலையின்றி
உயிரிழக்கும் தருவாயில்
ஊசலாடிக்கொண்டிருந்தான்
வாக்களித்த அப்பாவி!


2 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நல்லாருக்கு வாழ்த்துக்கள்.....

சும்மாதான் சொன்னது…

ரொம்ப நன்றிங்க