சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

காதலித்துப்பார் கவிதை வரும்! முற்பகல் 8:48காற்றில் மிதந்து வரும்
கானம்கூட - உன்னைக்
கண்டவுடன் நாணம் கொள்ளும்!

மலரில் படர்ந்திருக்கும்
மணம்கூட - உன்
அழகைக் கண்டு சினம் கொள்ளும்!

மலையில் ஒளிந்திருக்கும்
நீர்கூட - உன்னைக்
காண்பதற்கே அருவியாய் வரும்!

மண்ணில் புதைந்திருக்கும்
விதைகூட - உன்னைக்
காண்பதற்கே முளைத்து எழும்!

ஆலம் விழுதுகூட
உன்னைத் தொடுவதற்கே
மேலிருந்து கீழ்விழும்!

இருட்டில் உன் அழகைக்காண
சூரியனை ஒளித்துவைத்து
நிலவுன்னை எட்டிப்பார்க்கும்!

வெளிச்சத்தில் உன்னைக்காண
நிலவுதனை சுட்டு வீழ்த்தி
சூரியனும் உனை ரசிக்கும்!


விதிவிலக்கா நான்மட்டும்!
வந்துவிட்டேன் உனைக்காண்பதற்கு!

என்னையும் அறியாமல்
என்னுள்ளோர் கம்பனை
நீயின்றே படைத்துவிட்டாய்!

3 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

கவிதை நன்றாகவுள்ளது!!

சக்தியின் மனம் சொன்னது…

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

சும்மாதான் சொன்னது…

முனைவர் இரா.குணசீலனுக்கு நன்றிங்க
சக்தியின் மனம் : தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்